நாகை மாவட்டத்தில் கரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், நாகை அரசு தலைமை மருத்துவமனையில் 140 படுக்கைகள் மட்டுமே கரோனா நோயாளிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில் கூடுதல் படுக்கைகள் தனியார் கல்லூரிகளில் அமைக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, நாகையில் உள்ள தனியார் கல்லூரியில் 44 படுக்கைகள் கொண்ட சித்த மருத்துவ, கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தினை மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி நாயர் இன்று (ஆக. 10) தொடங்கி வைத்தார். இது மாநிலத்தின் 22ஆவது சித்த மருத்துவ மையமாகும்.
இதனிடையே, நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் கரோனா நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் உணவு வழங்கப்படவில்லை என்று எழுந்த புகாரை அடுத்து, மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு உரிய நேரத்தில் உணவு அளிக்கப்பட வேண்டும் என்று அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.