ஜப்பான் நாட்டின் நெல் நாற்று நடவு செய்யும் ’குழித்தட்டு’ என்ற இயந்திரம் இந்தியாவில் முதல்முறையாக நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் அறிமுகம் செய்துவைத்தார்.
அந்த நடவு இயந்திரத்தை ஓட்டி சோதனை மேற்கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர் கூறியதாவது, “திருக்கடையூர் விவசாய பண்ணையில் ’குழித்தட்டு’ என்கிற புதிய நடவு இயந்திரம் அறிமுகம் செய்துள்ளோம். இந்த இயந்திரம் மூலம் கூடுதலாக மகசூல் கிடைக்கிறது.” என்றார்.
அதைத் தொடர்ந்து திருக்கடையூர் அரசு விதைப்பண்ணை மேலாளர் குமரன் கூறுகையில், ”குழித்தட்டு முறையில் ஒரு ஏக்கர் நிலப்பரப்புக்கு நான்கு கிலோ விதையே போதுமானது. குழித்தட்டு இயந்திரத்தில் மண், வேர் இரண்டும் ஒன்றாக இருப்பதால், அந்த மண்ணிலேயே உயிர் உரங்களை கலந்துவிடலாம் என்றார்.
இதையும் படிங்க: வீடு முழுவதும் செடிகள் அமைத்த 'பசுமைக் காதலன்'!