ETV Bharat / state

குடிநீரில் கலக்கும் ஓஎன்ஜிசி எண்ணெய்? பொதுமக்கள் அவதி - குடிநீரில் கலக்கும் ஓஎன்ஜிசி எண்ணெய்

மயிலாடுதுறை அருகே குடிநீரில், ஓஎன்ஜிசி எண்ணெய் கலந்து வருவதால் 15க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, வயிற்று போக்கு, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதில், 2 குழந்தைகள் உள்பட 6 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

ONGC oil  ONGC oil mixed with water  people suffer ONGC oil mixed with water  people infected by water in which ONGC oil mixed  ஓஎன்ஜிசி எண்ணெய்  குடிநீரில் கலக்கும் ஓஎன்ஜிசி எண்ணெய்  மயிலாடுதுறை அருகே குடிநீரில் கலந்த எண்ணெய்
குடிநீரில் கலக்கும் ஓஎன்ஜிசி எண்ணெய்
author img

By

Published : Mar 20, 2022, 10:21 AM IST

Updated : Mar 21, 2022, 11:51 AM IST

மயிலாடுதுறை: குத்தாலம் தாலுகா, சேத்திரபாலபுரம் மெயின் ரோட்டில், ஓஎன்ஜிசி எண்ணெய் சேமிப்பு கிடங்கு உள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள எண்ணெய் கிணற்றில் இருந்து எடுக்கப்படும் வாயு மற்றும் எண்ணெய் இங்கு சேமித்து வைக்கப்படுகிறது. இந்த சேமிப்பு கிடங்கிற்கு எதிரே ராமாமிர்தம் தெரு உள்ளது.

இத்தெருவில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு புதிதாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் அளிக்கப்பட்டது. இந்த நீர்த்தேக்க தொட்டியில் இருந்து வரும் குடிநீரில், கடுமையான காவி படிந்து இருப்பதாலும், ஒருவாரமாக எண்ணெயும் கலந்து வருவதாலும், இப்பகுதியில் உள்ள குழந்தை மற்றும் பெரியவர்களுக்கு அதிக அளவில் தோல்அரிப்பு, வாந்தி, வயிற்றுப் போக்கு அதிக அளவில் உள்ளதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

குடிநீரில் கலக்கும் ஓஎன்ஜிசி எண்ணெய்?

இந்நிலையில், இதனால் பாதிக்கப்பட்டுள்ள 15க்கும் மேற்பட்டோர் குத்தாலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றுள்ளனர். இதில் 6 பேர் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மேலும், அப்பகுதியில் உள்ள பெரும்பாலான குழந்தைகளுக்கு தோலில் அரிப்பு ஏற்பட்டு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே, இப்பகுதியில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என்றும், இந்த ஓ.என்.ஜி.சி. எண்ணெய் சேமிப்பு கிடங்கு வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: கர்நாடகாவில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து - 8 பேர் உயிரிழப்பு

Last Updated : Mar 21, 2022, 11:51 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.