ETV Bharat / state

நாகை நாகூர் தர்கா கந்தூரி விழா தொடக்கம் - நாகை நாகூர் தர்கா கந்தூரி விழா

உலக புகழ்பெற்ற நாகூர் தர்கா கந்தூரி விழா தொடங்க இருப்பதை முன்னிட்டு முக்கிய நிகழ்வான பாய்மரம் ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.

பாய்மரம் ஏற்றும் நிகழ்வு
பாய்மரம் ஏற்றும் நிகழ்வு
author img

By

Published : Jan 2, 2022, 8:09 AM IST

நாகப்பட்டினம்: உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவின் 465ஆம் ஆண்டு கந்தூரி விழா வரும் 4ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி நேற்று (ஜன.1) அதிகாலை நாகூர் ஆண்டவர் தர்காவில், பாய்மரம் ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது. முன்னதாக ஆண்டவர் தர்காவில் சிறப்பு துவா ஒதப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மங்கள வாத்தியங்கள், அதிர்வேட்டுக்கள் முழங்க ஐந்து மினாராக்களிலும் பாய்மரங்கள் ஏற்றப்பட்டன. அப்போது, கூடியிருந்த ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கந்தூரி விழாவை சிறப்பிக்கும் விதமாக அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர்.

நாகூர் தர்கா பாய்மரம் ஏற்றும் நிகழ்வு

பாய்மரம் ஏற்றும் நிகழ்ச்சியில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் குடை பிடித்தவாறு ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்று நாகூர் ஆண்டவரை வேண்டிக்கொண்டனர்.

நாகூர் ஆண்டவர் தர்காவின் முக்கிய நிகழ்ச்சியான கொடியேற்று வைபவமும், அதனைத் தொடர்ந்து வரும் 13ஆம் தேதி நாகையில் இருந்து சந்தன கூடு ஊர்வலமும் வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது.

இதையும் படிங்க: உதகையில் பாரம்பரிய நடனமாடி சுற்றுலாப் பயணிகளை வரவேற்ற தோடர் இன மக்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.