புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுப்பணித் துறையில் தற்காலிக ஊழியர்களாக பணியாற்றி வரும் 100க்கும் மேற்பட்டோருக்கு கடந்த நான்கு மாத காலமாக ஊதியம் வழங்கப்படவில்லை.
இந்நிலையில் இன்று(ஜூலை 22) காரைக்கால் பொதுப்பணித் துறை அலுவலகம் அருகில் பொதுப்பணித் துறையில் பணியாற்றிவரும் அனைத்து தற்காலிக ஊழியர்களும் ஒன்று திரண்டு வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது தொழிலாளர்கள், "நான்கு மாத கால ஊதியத்தை உடனே வழங்க வேண்டும், மாதத்திற்கு 16 நாள்களுக்கு 3,200 ரூபாய் மட்டுமே ஊதியம் பெற்று கடந்த 10 வருடங்களுக்கு மேல் பணிபுரிந்து வரும் எங்களுக்கு முழு நேர பணி வழங்கிட வேண்டும், தற்போது நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தில் பணி நிரந்தரம் அறிவிக்க வேண்டும்" உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இதையும் படிங்க: திமுக, அதிமுக ஆதரவாளர்களுக்கிடையே கடும் வாக்குவாதம்!