நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை அரசு துரிதமாக செய்து வருகிறது. கரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவு காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த ஏழை-எளிய மக்களுக்கு அரசு உதவி திட்டங்களை அறிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு வருகின்ற ஏப்ரல் 2ஆம் தேதி முதல் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அரசு உதவித்தொகை, நியாய விலை பொருட்கள் வழங்கப்பட உள்ளது.
நியாயவிலைக் கடைகளுக்கு வரும் பொதுமக்கள் கட்டாயம் இரண்டு மீட்டர் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதற்கு அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது போன்ற பல நடைமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டமானது செம்பனார்கோவிலில், பூம்புகார் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பவுன்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஒன்றிய பெருந்தலைவர் நந்தினி ஶ்ரீதர், ஒன்றியத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அலுவலர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அனைவரும் சமூக இடைவெளியை கடைப்பிடித்து 2 மீட்டர் இடைவெளி விட்டு அமர்ந்திருந்தனர்.
மேலும் அனைவரும் முகக்கவசம் அணிந்திருந்தனர், விலையில்லா பொருட்களை பெறும் பொதுமக்களுக்கு முன்னதாகவே வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கப்பட வேண்டும் என்பதை அறிவுறுத்தினர்.
இதையும் படிங்க: கரோனா எதிரொலி: மருத்துவமனையை ஆய்வு செய்த அமைச்சர் செங்கோட்டையன்