ETV Bharat / state

பயிர்ப் பாதிப்பு விவகாரத்தில் அரசியல் வேண்டாம் - கூட்டணி எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி!

டெல்டா மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு அரசு விரைந்து நிவாரணம் வழங்க வேண்டும். தவறும் பட்சத்தில் விவசாயிகளுடன் இணைந்து தானும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அதிமுக கூட்டணி எம்எல்ஏவும், மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளருமான தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Jan 18, 2021, 6:51 PM IST

பயிர் பாதிப்பு விவகாரத்தில் அரசியல் வேண்டாம்

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் பாலையூர், பெருங்கடம்பனூர், சங்கமங்கலம் உள்ளிட்டப் பகுதியில் அறுவடைக்குத் தயாராக இருந்த சுமார் 17 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள், தற்போது பெய்த மழை நீரில் மூழ்கி, சாய்ந்து முழுவதும் சேதமடைந்துள்ளது.

பாலையூர் உள்ளிட்டப் பகுதிகளில் பயிர் பாதிப்புகளை மனித நேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளரும், நாகை சட்டப்பேரவை உறுப்பினருமான தமிமுன் அன்சாரி இன்று(ஜனவரி 18) பார்வையிட்டார். அப்போது, மழையால் சாய்ந்து மீண்டும் முளைவிடத் தொடங்கிய நெற்பயிர்களை எடுத்து எம்.எல்.ஏ.,விடம் காண்பித்து விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிமுன் அன்சாரி, "டெல்டா மாவட்டத்தில் வரலாறு காணாத பயிர்ப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பயிர்ப் பாதிப்புகளை அறிந்த பின்னரும், தமிழ்நாடு அரசு மௌனமாக இருப்பது நியாயம் இல்லை. பயிர்ப் பாதிப்புக்கு ஆளான விவசாயிகளுக்கு முதற்கட்ட நிவாரணத் தொகையை தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும்'' என்றார். தொடர்ந்து, ''வரும் 20ஆம் தேதி விவசாயிகளுக்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் சாலை மறியல் போராட்டத்தில் மஜக பங்கேற்கும்'' என்றும் தெரிவித்தார்.

பயிர் பாதிப்பு விவகாரத்தில் அரசியல் வேண்டாம் எம்எல்ஏ தமிமுன் அன்சாரி

இதையும் படிங்க: அதிமுகவில் நிர்வாகிகள் நியமிக்க தடை கோரிய வழக்கு தள்ளுபடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.