நாகை மாவட்டத்தில் நிவர் புயல் காரணமாக, மீனவர்கள் அறிவிப்பு வரும்வரை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல கூடாது என மீன்வளத் துறை உத்தரவிட்டிருந்தது. நிவர் புயலைக் தொடர்ந்து புரெவி புயல் உருவானதை அடுத்து மீன்பிடிக்கச் செல்லும் தடையானது நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில் மீன்வளத் துறை சார்பில் நேற்று (டிச. 06) மீண்டும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லலாம் என அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து நாகை மாவட்டத்தில் உள்ள அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், நாகூர் உள்ளிட்ட 54 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் இன்றுகாலை முதல் ஐஸ் கட்டி, தண்ணீர், டீசல் உள்ளிட்ட பொருள்களை படகில் ஏற்றிக் கொண்டு கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.