நாகப்பட்டினம் மாவட்ட கால்நடைத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு, கடந்த 2018 ஆம் ஆண்டு விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல் இன்று (பிப்.24) முதல் தொடர்ந்து மூன்று நாள்கள் நடைபெறுகிறது.
இதற்கான டோக்கன் பெறுவதற்காக, நடராஜன் தமயந்தி மேல்நிலைப்பள்ளியில் விண்ணப்பதாரர்கள் திரண்டனர்.
மாவட்ட கால்நடைத்துறையில் 41 காலி பணியிடங்களுக்கு 6,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதனால் அவர்கள் நீண்ட வரிசையில் வெயிலில் காத்திருந்தனர்.
இந்நிலையில் நேர்காணலை பல இடங்களில் நடத்த வேண்டும் என விண்ணப்பதாரர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: சென்னைப் பல்கலைக்கழக தொலைக்கல்வியில் சேர விண்ணப்பம்!