நாகை மாவட்டம் புதிய நம்பியார் நகர் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் சாந்தகுமார் (18). இவர் நேற்று மாலை வீட்டிலிருந்து வெளியே சென்றவர் இன்று (அக்.22) காலை வரை வீடு திரும்பவில்லை.
இதனையடுத்து சாந்தகுமாரை அவரது வீட்டார் பல இடங்களில் தேடியுள்ளனர். இந்நிலையில் சாந்தகுமார் நாகை சிவசக்தி நகரில் உள்ள செயல்படாத தனியார் பள்ளி கட்டடத்தின் பின்புறம் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
அதனைத் தொடர்ந்து அங்கு சென்ற வெளிப்பாளையம் காவல்துறையினர் உடலை கைப்பற்றி நாகை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இறப்புக்கான காரணம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:
குடும்பத் தகராறு : மனைவி, 3 பெண் குழந்தைகளை கொலை செய்த கொடூரம்