நாகை மாவட்டம், சீர்காழி அருகே நெப்பத்தூரில் தனியார் சவுடு மண் குவாரி ஒன்று இயங்கிவருகிறது. இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாகவும் விவசாய விளை நிலங்கள் பாதிக்கப்படுவதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
அதனால், அதற்கு அனுமதி அளித்த அரசு அலுவலர்களைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர், நெப்பத்தூர் மேலத்தெருவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்திற்கு காவல் துறையினர் அனுமதி மறுத்த நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர். அப்போது கைது செய்த ஆர்ப்பாட்டக்காரர்களை அழைத்துச் செல்ல போதுமான வாகன வசதியை காவல் துறையினர் செய்யாததால், தனிமனித இடைவெளியைப் பின்பற்றாமல், ஒரே வேனில் 20க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் ஏற்றினர்.
அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த போராட்டக் குழுவினர் காவல் துறையினர் வாகனத்தை செல்லவிடாமல், வழிமறித்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: தேனி ஆட்சியரை இடமாற்றம் செய்யக்கோரி மா.கம்யூ கண்டன ஆர்ப்பாட்டம்!