ETV Bharat / state

இலவசமாக முகக் கவசம் வழங்கும் பள்ளி மாணவி - nagai school girl produces tissue masks for vedharanyam people

நாகப்பட்டினம்: வேதாரண்யத்தைச் சேர்ந்த பனிரெண்டாம் வகுப்பு மாணவி குறைந்த செலவிலான டிஷ்யூ முகக் கவசங்களை தனது பகுதியில் உள்ள மக்களுக்கு இலவசமாக வழங்கிவருகிறார்.

nagai-school-girl
nagai-school-girl
author img

By

Published : Mar 21, 2020, 7:31 AM IST

நாட்டையே அச்சுறுத்தலில் ஆழ்த்தியுள்ள கரோனா வைரஸை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. கரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள முகக் கவசம் அணிவது பாதுகாப்பான ஒன்று எனக் கூறப்படும் நிலையில், அதை ஏழை எளிய மக்கள் கடைபிடிப்பது கடினமாகவே இருக்கிறது.

தமிழ்நாட்டில் முகக் கவசம் மிகக் குறைந்த விலையிலேயே விற்பனையாகி வந்தது. ஆனால், தற்போது அவை குறைந்தபட்சம் 20 ரூபாயிலிருந்து 200 ரூபாய் வரை விற்கப்படுவதால் ஏழை மக்கள் அதனை வாங்க சிரமப்படுகின்றனர்.

முகக் கவசம் செய்யும் நந்தினி

இந்நிலையில் நாகை மாவட்டம், வேதாரண்யம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் நந்தினி என்ற மாணவி, ஏழை மக்களுக்கும் முகக் கவசம் சென்றடைய வேண்டும் என்று எண்ணத்தில் பத்து பைசா செலவில் டிஷ்யூ காகிதத்தால் முகக் கவசம் செய்து, வேதாரண்யம் பகுதி மக்களுக்கு இலவசமாக வழங்கிவருகிறார். மாணவியின் இந்தச் செயலுக்காக பலரும் அவரை பாராட்டிவருகின்றனர்.

இதையும் படிங்க... கரோனா விழிப்புணர்வு - அதிமுகவினர் பொதுமக்களுக்கு முகக்கவசம் விநியோகம்!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.