ETV Bharat / state

1,500 மதுபாட்டில்கள் பறிமுதல்; நாகை போலீஸ் அதிரடி! - மதுபாட்டில்கள் கடத்தல்

நாகை: மயிலாடுதுறை அருகே வாகன சோதனையின்போது, புதுச்சேரியில் இருந்து கடத்திவரப்பட்ட 1,500 மதுபாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

1500 மதுபாட்டில்கள் பறிமுதல்
author img

By

Published : Aug 15, 2019, 3:20 AM IST

நாகை மாவட்டம் மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி உள்ளிட்ட பகுதிகளுக்கு புதுச்சேரியில் இருந்து சட்டவிரோதமாத மதுபாட்டில்கள் கடத்திவரப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதனை தடுப்பதற்காக பாலையூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட கத்திரிமூலை மெயின்ரோட்டில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சிறப்பு காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக வந்த ஸ்கார்பியோ காரை நிறுத்தி சோதனை செய்ததில், காரில் சட்டத்திற்கு புறம்பாக புதுச்சேரியில் இருந்து 1,500 மதுபாட்டில்கள் கடத்தி கொண்டுவரப்பட்டது தெரியவந்தது. உடனடியாக கார் உட்பட மதுபாட்டில்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

மேலும், காரை ஓட்டி வந்த காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த அற்புதராஜ் என்பவர் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1,500 மதுபாட்டில்கள் பறிமுதல்; நாகை போலீஸ் அதிரடி!

Intro:மயிலாடுதுறை அருகே மதுவிலக்கு போலீசார் வாகன சோதனையில் காரில் கடத்திவரப்பட்ட 1500 வெளிமாநில மதுபாட்டில்கள் பறிமுதல் ஒருவர் கைது
Body:புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்திலிருந்து நாகை மாவட்டம் மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி பகுதிகளுக்கு மதுபாட்டில்கள் சட்டத்திற்கு புறம்பாக அதிக அளவில் கடத்தி வரப்படுகிறது. இதனை தடுப்பதற்காக மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சிறப்பு போலீசார் பல்வேறு பகுதிகளில் வாகனசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் காரில் மதுபாட்டில்கள் கடத்தி வருவதாக வந்த ரகசிய தகவலின்பேரில் பாழையூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட கத்திரிமூலை மெயின்ரோட்டில் டி.எஸ்.பி சாமிநாதன் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த ஸ்கார்பியோ காரை நிறுத்தி சோதனை செய்ததில் காரில் சட்டத்திற்கு புறம்பாக புதுச்சேரி மாநில குவார்ட்டர் மதுபாட்டில்கள் 32 அட்டைபெட்டிகளில் 1500மது பாட்டிகள் இருப்பது தெரிய வந்தது. உடனடியாக காரையும் மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் காரை ஓட்டி வந்த காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த அற்புதராஜ் என்பவரை கைது செய்தனர். விசாரணையில் காரைக்காலிலிருந்து கும்பகோணத்திற்கு கடத்தி செல்வது தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.