நாகப்பட்டினம் மாவட்டம், நம்பியார் நகர் பகுதி மீனவர்களின் நீண்ட கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில் ரூ.34.30 செலவில் சிறிய மீன்பிடித் துறைமுகம் அமைத்திட அரசால் ஆணை வழங்கப்பட்டுள்ளது.
இந்த சிறிய மீன்பிடித் துறைமுகம் சுய தன்னிறைவுத் திட்டத்தின் கீழ் அமையவுள்ளது. இப்பகுதியில் மீன்பிடித் துறைமுகம் அமைக்க உரிய ஆய்வுகள் மேற்கொண்டு, சென்னை இந்திய தொழில்நுட்ப கழகத்தால் பரிசீலிக்கப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
சுய தன்னிறைவுத் திட்டத்தின் கீழ் அமையப்பெரும் இந்த மீன்பிடித் துறைமுகத்தின் திட்ட மதிப்பீட்டின் மூன்றில் ஒரு பங்குத்தொகையை மீனவர்கள் வழங்கிட இசைவு தெரிவித்துள்ளனர்.
இந்தத் திட்டத்தின் கீழ் அமையும் துறைமுகம், மீன்பிடித் தொழிலையே வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும் நம்பியார் நகர் பகுதி மக்களுக்கு பெரும் பயனுள்ளதாக அமையும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருந்தார்.