தமிழ்நாட்டில் 2016-17ஆம் கல்வியாண்டு முதல் பள்ளி பரிமாற்றத் திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. கிராமப்புற, நகர்ப்புற மாணவர்களை இணைக்கும் நோக்கில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தில் எட்டாம் வகுப்பு படிக்கும் 20 மாணவ, மாணவியர்கள் பயன்பெறுவர்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை ஒன்றியத்தில் நான்காவது ஆண்டாக நடைபெற்ற பள்ளி பரிமாற்றத் திட்ட்டம் நிகழ்ச்சியில், மூவலூர் மூதாட்டி ராமாமிர்தம் அம்மையார் மேல்நிலைப் பள்ளியிலிருந்து வந்த 20 மாணவர்கள், சித்தர்காடு அரசு உதவிபெறும் நடுநிலை பள்ளியில் படிக்கும் அந்த மாணவர்கள் 20 பேர், ஆசிரியர்களின் வழிகாட்டுதலோடு, சித்தர்காடு சீகாழி சிற்றம்பலநாடிகள் கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
தொடர்ந்து அம்மையார் பள்ளி மாணவர்களுக்கு பள்ளியில் தினசரி வாழ்வில் பயன்படும் அறிவியல் குறித்து செயல்முறை விளக்கம், யோகா பயிற்சி, தனித்திறன் மேம்பாடு ஆகிய பயிற்சிகள் வழங்கப்பட்டன. இதில் மாணவர்கள் பயனடைந்தனர்.
இதையும் படியுங்க: நோட்டு புத்தகங்களை வைத்து திருவள்ளுவர் ஓவியம் வரைந்து சாதனை