கரோனா தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதையும் மீறி அநாவசியமாக வெளியே சுற்றுபவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காவலர்கள் உள்ளிட்ட பல தரப்பினர் பல்வேறு வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ராமநாதபுரம், முதுகுளத்தூரில் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றும் முத்து இருளாண்டி என்பவர், கரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், நாட்டுப்புற பாடல் ஒன்றை பாடியுள்ளார். இந்த பாடல் அண்மையில் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
இவரின் இந்த முயற்சியைப் போலவே, நாகையில் செயல்பட்டு வரும் எஸ்.ஒ.எஸ். என்ற ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தை சேர்ந்த குழந்தைகள் கரோனா குறித்த விழிப்புணர்வு பாடல் ஒன்றுக்கு நடமாடி அசத்தியுள்ளனர்.
தனித்திருப்போம் விழித்திருப்போம், பிரதமர் சொல்வதை கேட்போம் போன்ற வரிகள் இடம்பெற்றுள்ள இந்த பாடலுக்கு ஏற்ப முகக் கவசம் அணிந்துகொண்டு நடனமாடுகின்ற குழந்தைகளின் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: 'கரோனா வைரஸிடம் எதுக்கு கெத்து காட்டுற...' - நாட்டுப்புற பாடல் பாடிய அசத்தும் ஆசிரியர்!