ETV Bharat / state

தீக்குளித்து தாய் தற்கொலை; காப்பாற்ற முயன்ற மகள் படுகாயம்! - sirkazhi mother self immolation

நாகை: சீர்காழி அருகே தீக்குளித்து தாய் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். அவரை காப்பாற்ற முயன்ற மகளுக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார்.

nagai at sirkazhi mother self immolated, daughter injured try rescuing her!
மருத்துவனை
author img

By

Published : Feb 14, 2020, 8:05 AM IST

நாகை மாவட்டம் சீர்காழி அருகே சேந்தன்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி (70). இவரும் இவரது மகள் செல்வியும் (50) ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக செல்வியின் தாய் ராஜேஸ்வரி உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளார். இதன் காரணமாக மனமுடைந்து தனது வீட்டின் பின்புறத்தில் உடம்பில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். தாயின் அலறல் சத்தம் கேட்டு அவரை காப்பாற்ற முயன்ற செல்விக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது.

தீக்குளித்து தாய் தற்கொலை; காப்பாற்ற முயன்ற மகள் படுகாயம்!

இந்நிலையில் ராஜேஸ்வரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த தீக்காயங்களுடன் செல்வி சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து சீர்காழி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: தேனி மருத்துவக் கல்லூரி செவிலி மாணவி தற்கொலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.