மயிலாடுதுறை, காந்திஜி சாலையில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி நாம் தமிழர் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநிலக் கொள்கை பரப்புரையாளர் தமிழன் காளிதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், புதிய கல்விக் கொள்கையை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக நாம் தமிழர் கட்சியினர் முழக்கங்களை எழுப்பினர்.
இந்நிலையில், சாலை மறியலில் ஈடுபட்ட 80க்கும் மேற்பட்டோரை மயிலாடுதுறை காவல் துறையினர் கைது செய்தனர். இதனால் மயிலாடுதுறை - கும்பகோணம் நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.