ETV Bharat / state

இரட்டை மாட்டு வண்டியை ஓட்டிச் சென்று நா.த.க. வேட்பாளர் வாக்குச் சேகரிப்பு!

author img

By

Published : Mar 23, 2021, 10:46 PM IST

மயிலாடுதுறை: இரட்டை மாட்டு வண்டியை ஓட்டிச் சென்று, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பொதுமக்களிடம் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

நாம் தமிழர் கட்சி
இரட்டை மாட்டு வண்டியை ஓட்டிச் சென்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக, அக்கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை மாநிலத் துணைத் தலைவர் கி. காசிராமன் போட்டியிடுகிறார். உழவரான இவர் தான் வசிக்கும் திருவெண்காடு, சுற்றுவட்டார மீனவ கிராமங்களில் 25-க்கும் மேற்பட்ட கிணறுகளைத் தூர்வாரியும், குடிநீரைச் சுத்திகரித்தும் பொதுமக்களுக்கு வழங்கி சேவை செய்துவருகிறார்.

மேலும் தனது வீட்டில் காளை மாடு, குதிரைகளைப் பராமரித்துவருகிறார். கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடுவதால் புதுமையான முறையில் பொதுமக்களிடம் ஆதரவு திரட்டிவரும் காசிராமன், கடந்த வாரம் மண்வளத்தைக் காப்போம் என்று கூறி கருவேலமரங்களை அகற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வாக்குச் சேகரித்தார்.

இரட்டை மாட்டு வண்டியை ஓட்டிச்சென்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வாக்குச் சேகரிப்பு

இந்நிலையில் இன்று (மார்ச் 23) தான் பராமரித்துவரும் காளை மாடுகள் பூட்டிய மாட்டு வண்டியை, தானே ஓட்டிச்சென்று தரங்கம்பாடி சாலை, மாயூரநாதர் வடக்குவீதி, கொத்தத்தெரு பகுதிகளில் பொதுமக்களிடம் வாக்குச் சேகரித்தார்.

டிப்-டாப் உடையில் மாண்டு வண்டியை ஓட்டிச்சென்று, கரும்பு விவசாயி சின்னத்திற்கு வாக்குச் சேகரித்தது பொதுமக்களைக் கவர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: பண்டாரத்தி பாடலுக்குத் தடை கோரிய வழக்கு - நடிகர் தனுஷுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.