ETV Bharat / state

பருவம் தவறிய மழையால் 1.27 லட்சம் ஹெக்டேர் பயிர் பாதிப்பு - அமைச்சர் தகவல்! - mayiladuthurai district news

தமிழ்நாட்டில் பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக 7 மாவட்டங்களில் 1,27,000 ஹெக்டேர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

பருவம் தவறிய மழையால் 1,27,000 ஹெக்டேர் நெற்பயிர்கள் பாதிப்பு - அமைச்சர் தகவல்!

author img

By

Published : Feb 6, 2023, 9:47 AM IST

அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் செய்தியாளர் சந்திப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக பெய்த பருவம் தவறிய தொடர் மழையின் காரணமாக, மாவட்டம் முழுவதும் ஒரு லட்சத்து 70,000 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சம்பா, தாளடி பயிர்களில், சுமார் 34,000 ஏக்கர் நெற்பயிர்கள் வயலோடு சாய்ந்து சேதமடைந்தன. அதேநேரம் மழைநீர் வயலில் தேங்கி நின்றதால், பல்வேறு இடங்களில் நெற்பயிர்களும் முளைக்க தொடங்கிவிட்டது.

மேலும், மாவட்டம் முழுவதும் சுமார் 51,000 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள உளுந்து, பயறு வகை பயிர்களில் சுமார் 38,000 ஏக்கர் பயிர்கள் முழுமையாக நீரால் சூழப்பட்டு சேதம் அடைந்துள்ளது. இந்த நிலையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், நேற்று (பிப்.5) பயிர் சேத பாதிப்புகளை ஆய்வு செய்தார்.

அமைச்சர் தலைமையில் வேளாண்மை உற்பத்தி ஆணையர் சமயமூர்த்தி, வேளாண் இயக்குனர் அண்ணாதுரை ஆகிய அரசு அலுவலர்கள் அடங்கிய குழுவினர், மயிலாடுதுறை வில்லியநல்லூர் அருகே நாராயணமங்கலம் என்ற இடத்தில் ஆய்வு செய்தனர். பயிர் சேதங்கள் தொடர்பாக காட்சிப்படுத்தப்பட்ட புகைப்படங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை அமைச்சர் ஆய்வு செய்தார்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், “தமிழ்நாட்டில் பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக 7 மாவட்டங்களில் ஒரு லட்சத்து 27,000 ஹெக்டேர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டன. பாதிப்பு விவரங்கள் முழுமையாக ஆய்வு மேற்கொண்டு, பிப்ரவரி 6ஆம் தேதி முதலமைச்சரிடம் தெரிவிக்க உள்ளோம்.

33 சதவீதத்துக்கு மேல் நெல் பாதிப்புகள் இருந்தால், அதற்கான நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும். 97 சதவீத விவசாயிகள் நெல்லுக்கான பயிர்காப்பீட்டுத் தொகையை செலுத்தி உள்ளார்கள். நெல்லின் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்தி அறிவிக்க தமிழ்நாடு முதலமைச்சர் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். எனவே அறிவிப்பு வந்தவுடன் நெல்லின் ஈரப்பதத்தை உயர்த்தி கொள்முதல் செய்யப்படும்” என்றார்.

இதையும் படிங்க: வேட்டி, சேலை வழங்கும் நிகழ்ச்சி; 4 மகளிரின் உயிரிழப்புக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் - ஈபிஎஸ்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.