கரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் வகையில், அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு, தமிழ்நாடு அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றது.
இந்நிலையில் நாகை மாவட்டம், மயிலாடுதுறை ஒன்றியத்துக்கு உட்பட்ட 54 ஊராட்சிகளில் பணிபுரிந்து வரும் தூய்மைப் பணியாளர்கள் 366 பேர், மணல்மேடு பேரூராட்சியில் பணியாற்றி வரும் 35 தூய்மைப் பணியாளர்கள் என 401 நபர்களுக்கும் பொன்னாடை அணிவித்து மரியாதை செய்து, ஒரு வாரத்திற்குத் தேவையான அரிசி உட்பட சமையல் பொருட்களின் தொகுப்புகள் வழங்கப்பட்டது.
மயிலாடுதுறை அருகே உள்ள வில்லியநல்லூர், பட்டவர்த்தி, மணல்மேடு, திருமங்கலம் ஆகிய இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மயிலாடுதுறை அதிமுக எம்எல்ஏ ராதாகிருஷ்ணன் தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும் இலவசப்பொருட்களை வழங்கி, பாராட்டி மரியாதை செய்தார்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய ஆணையர், ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட ரேபிட் கிட்கள் தரமற்றதா? - சீனா விளக்கம்