தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக 2 ஆயிரத்து 500 ரூபாய் பணம், ஒரு முழு கரும்பு, 1 கிலோ சர்க்கரை, 1 கிலோ பச்சை அரிசி, முந்திரி, உலர்திராட்சை உள்ளிட்டவைகள் வழங்க உத்தரவிட்டார்.
அதன்படி, மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் தொகுதிக்குட்பட்ட தரங்கம்பாடி தாலுகா எடுத்துக்கட்டி ஊராட்சியிலுள்ள ஆயிரத்து 150 குடும்ப அட்டைதாரர்களுக்கு பூம்புகார் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பவுன்ராஜ் வீடு வீடாக நேரில் சென்று பொங்கல் பரிசுக்கான டோக்கன்களை வழங்கி தொடங்கிவைத்தார்.
பொங்கல் பரிசு வாங்க வரும்போது முகக்கவசம் அணிந்தும், தகுந்த இடைவெளியை பின்பற்றியும், கட்டாயம் டோக்கனை கொண்டு வர வேண்டும் என்றும் பொதுமக்களிடம் அறிவுறுத்தினார். இந்நிகழ்வின்போது, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளர் சேகர், எழுத்தர் விஜயபாஸ்கர், ஊராட்சி மன்ற துணை தலைவர் விஜய், விற்பனையாளர் காயத்ரி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: பெரியகுளம் அருகே பொங்கல் பரிசு டோக்கனை பறித்த அதிமுக நிர்வாகி; பொதுமக்கள் எதிர்ப்பு