ETV Bharat / state

'கரோனா காலத்திலும் கொள்ளையடிக்கும் ஒரு கும்பலிடம் மாநிலம் மாட்டிக்கொண்டது'- ஸ்டாலின்

author img

By

Published : Jul 25, 2020, 12:26 AM IST

Updated : Jul 25, 2020, 1:42 AM IST

சென்னை: கரோனா காரணமாக உயிரிழந்தவர்கள் குறித்த விஷயத்தில் பொய்க்கணக்கு எழுதியவர்கள், ஒவ்வொரு திட்டங்களுக்கும் ஒதுக்கும் பணத்தில் எவ்வளவு பொய்க்கணக்கு எழுதி இருப்பார்கள் என்று திமுக தலைவர் ஸ்டலின் விமர்சித்துள்ளார்.

Stalin
Stalin

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், நாகை மாவட்ட பா.ஜ.க. பொதுச் செயலாளரும், பூம்புகார் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளருமான அமிர்த விஜயக்குமார் திமுகவில் இணைந்தார்.

அவருடன் பாஜக, அஇஅதிமுக, பாமக உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அக்கட்சிகளிலிருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளனர். அவர்களை வரவேற்று திமுக தலைவர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், "நாகை மாவட்டத்தைச் சேர்ந்த அமிர்த விஜயகுமார் தலைமையில் பா.ஜ.க. மற்றும் மாற்று இயக்கங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணையும் நிகழ்ச்சியில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி.

நாடு எத்தகைய சூழ்நிலையில் இருக்கிறது என்பது உங்களுக்கே தெரியும். அது தெரிந்ததால்தான், மக்களை திமுகதான் காப்பாற்ற முடியும் என்ற எண்ணத்தோடு நீங்கள் திமுகவில் இணைந்திருக்கிறீர்கள்.

மார்ச் மாதத்தில் இருந்து கரோனா பரவி வருகிறது. கரோனாவை கட்டுப்படுத்த எந்த முயற்சியையும் மத்திய - மாநில அரசுகள் எடுக்கவில்லை. மேலும் இரண்டு நாள்களாக நீங்கள் செய்திகளில் பார்த்திருப்பீர்கள். கரோனாவால் மரணம் அடைந்தவர்கள் எண்ணிக்கையையே தமிழ்நாடு அரசு மறைத்து விட்டார்கள்.

கரோனாவால் மரணம் அடைந்தவர்கள் தமிழ்நாட்டில்தான் குறைவு என்று காட்டுவதற்காக, இறந்தவர்கள் எண்ணிக்கையை மறைத்து விட்டார்கள். மரணத்திலேயே இவ்வளவு பொய்க்கணக்கு எழுதி இருப்பவர்கள், ஒவ்வொரு திட்டங்களுக்கும் ஒதுக்கும் பணத்தில் எவ்வளவு பொய்க்கணக்கு எழுதி இருப்பார்கள். கரோனா காலத்திலும் கொள்ளையடிக்கும் ஒரு கும்பலிடம் மாநிலம் மாட்டிக் கொண்டது" என்றார்.

மேலும், சட்டப்பேரவை தேர்தலுக்கான பணிகள் தொடங்கும்போது அதில் திமுக நிர்வாகிகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: திருமாவளவன் குறித்து அவதூறு, காயத்ரி ரகுராம் மீது புகார்!

Last Updated : Jul 25, 2020, 1:42 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.