மயிலாடுதுறை: சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டைநாதர் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் குமரகுருபரன் ஆகியோர் 30 ஆண்டுகளுக்குப் பிறகு அங்கு நடக்கும் திருப்பணிகளை நேற்று (ஜூலை29) ஆய்வு மேற்கொண்டனர்.
தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு, நவகிரக தலங்களில் ஒன்றான திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் புதன் தலத்தில் ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக, கோவில் நிர்வாகத்தின் சார்பாக அவருக்கு பூர்ண கும்ப மரியாதை அளிக்கபட்டது.
அதனைத் தொடர்ந்து விநாயகர், சுவேதாரண்யேஸ்வரர், பிரம்ம வித்யாம்பிகை மற்றும் புதன் சுவாமி தரிசனம் செய்து கோவிலில் நடைபெற உள்ள புதிய கட்டிடத்தின் வரைபடங்களை பார்வையிட்டார். ஆய்வில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலித, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன், இந்து சமய அறநிலை துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: உலகிலேயே மிக நீளமான மூவர்ணக்கொடி - கெஜ்ரிவால் மக்களுக்கு அழைப்பு