மயிலாடுதுறை: திருக்கடையூரில் உலக புகழ் வாய்ந்த ஸ்ரீ அபிராமி சமேத ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் 60 வயது பூர்த்தி அடைந்தவர்கள் முறையே மணிவிழா, சதாபிஷேகம் செய்து வழிபட்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும் எனக் கூறப்படுவதால் தினந்தோறும் வழிபாடு நடைபெறுவது வழக்கம். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வர்.
இந்த கோயிலுக்கு இன்று (ஜூன் 4) அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அமைச்சர் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து அமைச்சர் கஜபூஜை, கோபூஜை செய்து கள்ளவாரணப் பிள்ளையார், ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர், ஸ்ரீகாலசம்ஹார மூர்த்தி, ஸ்ரீ அபிராமி அம்மன் சன்னதிகளில் தரிசனம் செய்தார். அவருடன் அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் இ.ரா. கண்ணன் உள்ளிட்ட துறை அலுவலர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: காவிரி நீருக்கு பூஜை செய்து மலர்த்தூவி வரவேற்ற விவசாயிகள்..!