நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீன மடத்தின் மடாதிபதி 26-வது குருமகா சந்நிதானம், ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம் பந்த பராமாசாரிய சுவாமிகள் நேற்று உடல்நலக்குறைவு காரணமாக முக்தியடைந்தார்.
94 வயதான அவரது திருமேனி தருமபுரம் ஆதீனத்தின் பொதுமண்டபத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது பக்தர்கள், ஆன்மீகப் பெரியவர்கள், முக்கியப் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மேலும், அமைச்சர் ஓ.எஸ். மணியன், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ். பவுன்ராஜ், வி. இராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
இதையும் படிங்க: சூடான் தீ விபத்து; மகனின் உடலை மீட்டு தரக்கோரி கண்கலங்கிய தாய்!