ETV Bharat / state

'மயிலாடுதுறை மாவட்டமாக உருவானது மக்களுக்கு மிகப்பெரிய வசதி!' - மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை புதிய மாவட்டமாக உருவானதால் பொதுமக்களுக்கு மிகப்பெரிய வசதி ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஓ.எஸ். மணியன்
அமைச்சர் ஓ.எஸ். மணியன்
author img

By

Published : Dec 28, 2020, 1:37 PM IST

நாகை மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்ட அறிவிப்பை கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் கூட்டத்தொடரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். தொடர்ந்து ஏப்ரல் 7ஆம் தேதி இதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, கடந்த ஜூலை 15ஆம் தேதி மாவட்ட சிறப்பு அலுவலராக லலிதாவும், எஸ்பியாக ஸ்ரீநாதாவும் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில், தமிழ்நாட்டின் 38ஆவது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் இன்று தொடங்கிவைத்தார்.

இதில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன், மாவட்ட உருவாக்க அலுவலர் லலிதா உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் விவசாயிகள், வர்த்தகர்கள் பங்கேற்றனர்.

மயிலாடுதுறை உதயம்: பெரும் மகிழ்ச்சியில் மக்கள்- அமைச்சர் ஓ.எஸ். மணியன் பெருமிதம்

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஓ.எஸ். மணியன், "நாகை மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு மயிலாடுதுறை வருவாய் கோட்டம் தமிழ்நாட்டின் 38ஆவது மாவட்டமாக இன்று உதயமாகியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் உருவானதால் பொதுமக்களுக்கு மிகப்பெரிய வசதி ஏற்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, நாகை மாவட்டம் வேதாரண்யம் ஆகிய இரண்டு தாலுகாவை வருவாய் கோட்டமாக முதலமைச்சர் தொடங்கிவைத்துள்ளார்.

அமைச்சர் ஓ.எஸ். மணியன்

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ஆட்சியர் அலுவலகம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் கட்டுவதற்கு 26 ஏக்கர் நிலம் தருமபுரம் ஆதினம் தந்துள்ளார். அந்த இடத்தைக் கையகப்படுத்த அரசுப் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

இதற்கான நிதியை முதலமைச்சர் விரைவில் ஒதுக்கீடு செய்வார். மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வணிகவரி அலுவலக கட்டடத்தில் இன்றுமுதல் செயல்படத் தொடங்கும். மிக விரைவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டிமுடிக்கப்படும்" என்றார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டின் 38ஆவது மாவட்டமாக உதயமானது மயிலாடுதுறை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.