மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் புரெவி புயல் கனமழை, வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட பாதிப்புகளை அமைச்சர் ஓ.எஸ். மணியன் பார்வையிட்டு பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
மணல்மேடு அருகே பழவாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட தாழஞ்சேரி, சோழியன்கோட்டகம் கிராமங்களில் குடியிருப்புப் பகுதிகளைப் பார்வையிட்டு பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.
தொடர்ந்து அருண்மொழித்தேவன் கிராமத்தில் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புரெவி புயலால் ஏற்பட்ட கனமழையால் விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.
குடிசை வீடுகளில் வெள்ளநீர் புகுந்துள்ளது. இதனால், பாதுகாப்பு இல்லாத காரணத்தால், பொதுமக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். விளைநிலங்களில் புகுந்துள்ள வெள்ள நீர் வடிந்தால்தான் உண்மையான பாதிப்பு தெரியவரும்" என்றார்.
இதையும் படிங்க: ‘எம்ஜிஆருடன் ரஜினியை ஒப்பிட முடியாது’ -அமைச்சர் ஜெயக்குமார்!