தமிழ்நாடு முழுவதும் 2 ஆயிரம் அம்மா மினி கிளினிக்குகள் அமைக்கும் திட்டத்தின் கீழ் சீர்காழி அருகே நத்தம், ராதாநல்லூர், மகேந்திரப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் புதிதாக மூன்று அம்மா மினி கிளினிக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதனை கைத்தறி மற்றும் துணிநூல் அமைச்சர் ஓ.எஸ். மணியன் பங்கேற்று திறந்து வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாகப்பட்டினம் மாவட்டத்தில் முதற்கட்டமாக 18 அம்மா மினி கிளினிக்குகளில் 17 கிளினிக்குகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
பின்னர் தேமுதிக 40 சட்டப்பேரவைத் தொகுதிகளை கேட்டது தொடர்பான கேள்விக்கு, தொகுதி ஒதுக்கீடு கேட்பவர்கள் கூடுதலாகதான் கேட்பார்கள் சட்டப்பேரவைத் தேர்தலில் யார் யாருக்கு எவ்வளவு இடங்கள் ஒதுக்கப்படும் என்பது குறித்து பேசி முடித்த பிறகு தெரியவரும். சசிகலா சிறையிலிருந்து வெளிவருவது குறித்து ஒன்றும் தெரியவில்லை எனக் கூறினார்.
இதையும் படிங்க: அன்புமணி கண் அசைத்தால் போதும் திமுகவினர் எங்கும் நடமாட முடியாது - பாமக நிர்வாகி மிரட்டல்