ETV Bharat / state

'ஸ்டாலின் இஸ்லாமியர்களை தவறாக வழிநடத்துகிறார்' - ஓ.எஸ். மணியன்

author img

By

Published : Feb 8, 2020, 5:27 PM IST

நாகப்பட்டினம்: திமுக தலைவர் ஸ்டாலின் இஸ்லாமியர்களை தவறாக வழிநடத்துகிறார் என அமைச்சர் ஓ.எஸ். மணியன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

minister O S Maniyan press meet at Nagapattinam
minister O S Maniyan press meet

நாகப்பட்டினம் மாவட்டம் பொறையார் அரசு பேருந்து பணிமனையில் ஊழியர்களுக்கான ரூ. 39 லட்சம் மதிப்பிலான புதிய ஓய்வறை கட்டடத்தை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் திறந்து வைத்தார்.

இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அவர், ”இந்தியாவில் உள்ள அஸ்ஸாம் போன்ற எல்லையோர மாநிலங்கள் வழியாக வெளிநாட்டவர்கள் ஊடுருவாமல் இருப்பதற்காக குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டுக்கு பாதிப்பு கிடையாது. எதிர்க்கட்சிகள் வாக்குகளை பெறுவதற்காக தவறான கருத்துகளை கூறி பொதுமக்களை திசை திருப்புகிறார்கள்.

அமைச்சர் ஓ. எஸ்.மணியன்

அரசியல் செய்ய வழியில்லாமல் குடியுரிமை திருத்தச் சட்டத்தை கையில் எடுத்து தவறான கருத்துகளை கூறி வரும் ஸ்டாலின், குறுகிய மனப்பான்மையுடன் இஸ்லாமியர்களை தவறாக வழிநடத்துகின்றார்” என்றார்.

மேலும், நடிகர் விஜய் வீட்டில் நடந்த வருமானவரித் துறை சோதனை குறித்து கேட்டதற்கு, வருமானவரித் துறை சோதனை அனைத்து துறைகளிலும் நடைபெறும் நிகழ்வு. அதில் எந்த உள்நோக்கமும் கிடையாது. மடியில் கனமில்லை என்றால் ஏன் பயப்பபட வேண்டும் என்றார்.

இதையும் படிங்க: கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் முற்றுகை போராட்டம் - ஆசிரியர்கள் சங்கம் எச்சரிக்கை!

Intro:குறுகிய மனப்பான்மையோடு இஸ்லாமியர்களை தவறாக வழிநடத்தி செல்கிறார் ஸ்டாலின் என அமைச்சர் ஓ. எஸ்.மணியன் விமர்சனம்.Body:பொறையாரில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக பணிமணையில் ஊழியர்களுக்கான 39 லட்சம் மதிப்பிலான புதிய ஓய்வறை மற்றும் பராமரிப்பு கட்டித்தை திறந்துவைத்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன் குறுகிய மனப்பான்மையோடு இஸ்லாமியர்களை தவறாக வழிநடத்தி செல்கிறார் ஸ்டாலின் எனவும் விமர்சனம்.

நாகை மாவட்டம் பொறையார் அரசு பேருந்து பணிமனையில் ஊழியர்களுக்கான புதிய ஓய்வறை கட்டிடத்தை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திறந்து வைத்தார். அங்கிருந்த பழைமை வாய்ந்த ஓய்வறை கட்டிடடம் கடந்த 20.10.2017 அன்று இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் பிரபாகரன், மணிவண்ணன், தனபால், பாலு, ராமலிங்கம், சந்திரசேகா, முனியப்பன், அன்பரசன் ஆகிய 8 ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.இதனையடுத்து பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிதி, ரூபாய் 39 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்ட ஓய்வறை மற்றும் பராமரிப்பு கூடத்தை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் திறந்து வைத்தார்.

அதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் இந்தியாவில் உள்ள அஸ்ஸாம் போன்ற எல்லையோர மாநிலங்கள் வழியாக வெளிநாட்டவர்கள் ஊடுருவாமல் இருப்பதற்காக குடியுரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்றும். இதனால், தமிழகத்திற்கு பாதிப்பு கிடையாது எனவும், எதிர்க்கட்சிகள் வாக்குகளை பெறுவதற்காக தவறான கருத்துகளை கூறி பொது மக்களை திசை திருப்புகிறார்கள். அரசியல் செய்ய வழியில்லாமல் குடியுரிமை சட்டத்தை கையில் எடுத்து தவறான கருத்துகளை கூறி குறுகிய மனப்பான்மையுடன் இஸ்லாமியர்களை தவறாக வழிநடத்துகின்றார் ஸ்டாலின் என விமர்சனம் செய்தார். வருமான வரித்துறை சோதனை அனைத்து துறைகளிலும் நடைபெரும் நிகழ்வு எந்த உள்நோக்கமும் கிடையாது மடியில் கனமில்லை என்றால் ஏன் பயப்பபட வேண்டும் என கேள்வி எழுப்பியவர், டி.என்.பி.சி முறைகேடு விவகாரத்தில் முறையான நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

பேட்டி:- ஓ.எஸ்.மணியன்.கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.