ஐதராபாத்: 9வது மகளிர் டி20 உலக கோப்பை (Womens T20 World Cup) கிரிக்கெட் தொடர் இன்று முதல் அக்டோபர் 20ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் கோலாகலமாக நடைபெறுகிறது. முதலாவது ஆட்டத்தில் சார்ஜா மைதானத்தில் இன்று மதியம் 3.30 மணிக்கு வங்கதேசம் - ஸ்காட்லாந்து மகளிர் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.
முன்னதாக வங்கதேசத்தில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்த திட்டமிட்டு இருந்த நிலையில், அங்கு ஏற்பட்ட அசாதாரண சூழல் மற்றும் ஆட்சி மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றபட்டது. ஹர்மன்பிரீத் கவுர் தலைமையில் இந்திய மணி களமிறங்குகிறது.
Captains' Media Day ✅
— BCCI Women (@BCCIWomen) October 2, 2024
Joint Panel Session ✅
Photo-op ✅#T20WorldCup | #TeamIndia | #WomenInBlue | @ImHarmanpreet
📸: ICC pic.twitter.com/FgyLlYiN9f
மொத்தம் 10 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் ஆட்டங்களில் மோத் உள்ள நிலையில், அதில் ஒவ்வொரு பிரிவிலும் முன்னிலை பெறும் அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறும். மொத்தம் 23 ஆட்டங்கள் நடைபெற உள்ள நிலையில் அக்டோபர் 20ஆம் தேதி இறுதிப் போட்டி நடக்கிறது.
ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து அணிகள் கோப்பையை வெல்லும் முனைப்புடன் களம் காண உள்ளன. இதில் இந்திய அணி விளையாடும் போட்டிகள் குறித்த அட்டவணையை காணலாம்.
The road to #T20WorldCup greatness begins today 🏆#WhateverItTakes pic.twitter.com/0FQkPWCr4V
— ICC (@ICC) October 3, 2024
இந்தியா அட்டவணை:
- இந்தியா vs நியூசிலாந்து: அக்டோபர் 4, இரவு 7:30 மணி,
- இந்தியா vs பாகிஸ்தான்: அக்டோபர் 6, மாலை 3:30,
- இந்தியா vs இலங்கை: அக்டோபர் 9, இரவு 7:30,
- இந்தியா vs ஆஸ்திரேலியா: அக்டோபர் 13, இரவு 7:30 மணி.
இந்திய மகளிர் அணி ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
இந்திய மகளிர் அணி விவரம்:
இந்தியா: ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா, தீப்தி ஷர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், யாஸ்திகா பாட்டியா, பூஜா வஸ்த்ரகர், அருந்ததி ரெட்டி, ரேணுகா சிங் தாக்கூர், தயாளன் ஹேமலதா, ஆஷா சோபனா, ராதா யாதவ், ஸ்ரேயங்கா பாட்டீல்,0 சஜனா சஜீவன்.
இது தவிர உமா செத்ரி (விக்கெட் கீப்பர்), தனுஜா கன்வர், சைமா தாகூர் ஆகிய பயண இருப்புகளாக தக்கவைக்கப்பட்டு உள்ளனர்.
𝗠𝗮𝗿𝗸 𝗬𝗼𝘂𝗿 𝗖𝗮𝗹𝗲𝗻𝗱𝗮𝗿 🗓️#TeamIndia's schedule for the ICC Women's #T20WorldCup 2024 is 𝙃𝙀𝙍𝙀 🔽 pic.twitter.com/jbjG5dqmZk
— BCCI Women (@BCCIWomen) August 26, 2024
பரிசுத் தொகை:
இதற்கும் முன் இல்லாத வகையில், கடந்த உலக கோப்பை தொடரை காட்டிலும் இந்த முறை 134 சதவீதம் பரிசுத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. கடைசியாக 2023ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற 20 ஓவர் மகளிர் உலக கோப்பை சாம்பியனான ஆஸ்திரேலிய அணிக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.
ஆனால் தற்போது 2.34 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் 19 கோடியே 64 லட்ச ரூபாய்) பரிசுத் தொகையாக வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. ஆடவர் 20 ஓவர் உலக கோப்பைக்கு இணையாக மகளிர் விளையாட்டையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஐசிசி இந்த பரிசுத் தொகையை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது அசாருதீனுக்கு சம்மன்! என்ன வழக்கு தெரியுமா? - ED Summon Mohammad Azharuddin