ETV Bharat / state

கோழி திருடுவதாகக் கூறிய மூதாட்டி.. துடிக்க துடிக்க கொலை செய்த இளைஞர்.. திருப்பத்தூரில் பரபரப்பு! - Tirupathur Old lady murder

வாணியம்பாடி அருகே வீட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டியை கொடூரமாக தாக்கி கொலை செய்த அதே ஊரைச் சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கைதான காளியப்பன் மற்றும் காவல்துறையினர்
கைதான காளியப்பன் மற்றும் காவல்துறையினர் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 3, 2024, 1:32 PM IST

திருப்பத்தூர்: வாணியம்பாடி அடுத்த ராஜபாளையம் கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி சந்திராபாய் (75). இவருடைய கணவர் விஸ்வநாதன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வரும் நிலையில், மூதாட்டி சந்திராபாய் ராஜபாளையத்தில் உள்ள வீட்டில் தனியாக இருந்து கூலி வேலை செய்து வந்தார்.

இந்நிலையில், வெளியூரில் உள்ள சந்திராபாயின் மகள், தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில் தனது தாய்க்கு செல்போன் மூலம் பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

இந்நிலையில், நேற்று காலை சந்திராபாயின் மகள் செல்போனில் அழைத்தபோது, வெகுநேரமாக சந்திராபாய் செல்போனை எடுக்காததால், சந்திராபாயின் மகள், அவரது வீட்டின் அருகே உள்ளவர்களை தொடர்பு கொண்டு, தனது தாய் செல்போன் எடுக்கவில்லை, அதுகுறித்து விசாரிக்குமாறு கூறியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, அக்கம்பக்கத்தினர் சந்திராபாய் வீட்டிற்க்குச் சென்று பார்த்த போது, வீடு திறந்த நிலையிலும், மூதாட்டி ஆடைகள் களைந்து, ரத்த வெள்ளத்தில் இறந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, உடனடியாக இதுகுறித்து ஆலங்காயம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல்.. ஏ1 அக்யூஸ்ட்டாக ரவுடி நாகேந்திரன்..

தகவலின் பேரில் விரைந்த ஆலங்காயம் காவல்துறையினர் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா தலைமையிலான காவல்துறையினர், மூதாட்டியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து, மூதாட்டியின் செல்போன் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்த நிலையில், இச்சம்பவம் குறித்து ஆலங்காயம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா தலைமையிலான 4 தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தி கொலையாளியைத் தேடி வந்தனர்.

மேலும், திருவண்ணாமலை பகுதியில் இருந்து வீரா என்ற மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து ஆய்வு செய்தனர். அப்போது, மோப்ப நாய் வீரா ராஜபாளையம் ஏரிக்கரை பகுதியிலேயே சிறிது நேரம் சுற்றி வந்தது.

பின்னர், அதே பகுதியைச் சேர்ந்த சேட்டு என்ற காளியப்பன் (18) என்ற இளைஞரை காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் கைது செய்து, விசாரணை மேற்கொண்டனர். அதில், மூதாட்டி சந்திராபாய், தன்னை கோழி மற்றும் வீட்டில் உள்ள பொருட்களை திருடுவதாக கிராம மக்களிடம் கூறி வந்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்து, மூதாட்டி வீட்டில் தனியாக இருந்த போது அவரை ஆத்திரத்தில் சரமாரியாக தாக்கி கொலை செய்ததாக இளைஞர் காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து இளைஞர் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.