ETV Bharat / state

தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல்.. அலறி கூச்சலிட்ட ரயில்வே ஊழியர் - பயணிகள் செய்த செயல்! - Train Track Damage in Ranipet - TRAIN TRACK DAMAGE IN RANIPET

அரக்கோணம் அடுத்த புளியமங்கலம் அருகே தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை ரயில்வே ஊழியர் தகுந்த நேரத்தில் கண்டுபிடித்து அலறி கூச்சலிட்டதால், S-1 கோச்சில் இருந்த பயணிகள் அபாய சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல்
ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் (Credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 3, 2024, 1:24 PM IST

ராணிப்பேட்டை: கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு அரக்கோணம் வழியாக நாள்தோறும் விரைவு ரயில் இயக்கப்படுகிறது. அந்த வகையில், எக்ஸ்பிரஸ் ரயில் இன்றும் வழக்கம்போல் அரக்கோணம் ரயில் நிலையத்திற்கு காலை 8.50 மணிக்கு வந்து இரண்டு நிமிடங்கள் நின்று புறப்பட்டுச் சென்றது.

இந்த நிலையில், அரக்கோணம் ரயில் நிலையத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புளியமங்கலம் ரயில்வே ஸ்டேஷன் செல்லும்போது பச்சைக்கொடி காண்பிக்கும் ரயில்வே ஊழியர் ஒருவர், தண்டவாளம் உடைந்து இருப்பதைக் கவனித்து அலறி கூச்சலிட்டார். அதனை ரயில் என்ஜின் லோகோ பைலட் கவனிக்காததால், ரயில் இன்ஜின் மற்றும் முன்பதிவு இல்லாத பெட்டி என ஏசி பெட்டிகள் கடந்ததுள்ளது.

இருப்பினும், ரயில்வே ஊழியர் தொடர்ந்து அலறி கூச்சலிட்டதால், S1 கோச்சிலிருந்த பயணிகள் அவரது அலறல் சத்தம் கேட்டு அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்ததால், ரயில் நிறுத்தப்பட்டுள்ளது. அதன் பின்னர் ரயில் இன்ஜின் லோகோ பைலட் மற்றும் கார்டு ஆகியோருக்கு தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: ரயிலில் அடிபட்டு 317 பேர் உயிரிழப்பு.. சேலத்தில் 9 மாதங்களில் நடந்த துயரம்.. காரணம் என்ன?

தொடர்ந்து, அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து விரைந்து வந்த ஊழியர்கள், சுமார் 45 நிமிடம் போராடி தண்டவாளம் உடைந்த இடத்தில் கப்ளிங் பிளேட்டுகள் வைத்து தற்காலிகமாக சீரமைத்தனர். அதன் பிறகு ரயில் 9.40 மணிக்கு அங்கிருந்து 20 கிலோ மீட்டர் வேகத்தில் புறப்பட்டுச் சென்றது. மேலும், தண்டவாள விரிசல் எப்படி ஏற்பட்டது என்பது குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதால் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில் 45 நிமிடங்கள் காலதாமதமாகச் சென்றது. அதேநேரம், வேறு எந்த ரயில்களுக்கும் பாதிப்பு இல்லை எனவும் கூறப்படுகிறது. ஆனால், 45 நிமிடம் காலதாமதத்தால் அரசு அலுவலகங்கள் மற்றும் பல்வேறு பணி நிமித்தம் காரணமாகச் சென்ற பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.