'ஒளியிலே தெரிவது தேவதையா..' மெய்சிலிர்க்கும் சேலம் சிறை எஸ்பியின் குரல்.. வைரலாகும் வீடியோ! - sp singing song for prisoners - SP SINGING SONG FOR PRISONERS
🎬 Watch Now: Feature Video
Published : Oct 3, 2024, 1:23 PM IST
சேலம்: சேலம் மத்திய சிறையில் கைதிகளுக்காக சிறை காவல் கண்காணிப்பாளர் திரைப்படப் பாடல் பாடி அசத்தியுள்ளார். தற்போது இது குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. சேலம் மத்திய சிறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இந்த நிலையில், நேற்று (அக்.02) காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, மத்திய சிறையில் விளையாட்டுப் போட்டி, கவிதை, பேச்சு போட்டி மற்றும் கட்டுரை உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் கைதிகளுக்கு நடத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மத்திய சிறை கண்காணிப்பாளர் வினோத் பரிசுகளை வழங்கியுள்ளார்.
இதனையடுத்து, அங்கு நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சியில், கைதிகளின் வேண்டுகோளுக்கு இணங்க சிறைத்துறை கண்காணிப்பாளர் வினோத் பாடல் பாடினார். இசைக்கு ஏற்றவாறு திரையிசை பாடகர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் ‘அழகி’ திரைப்படத்தின் 'ஒளியிலே தெரிவது தேவதையா' என்ற பாடலை பாடி அசத்தினார். எஸ்பியின் பாடலைக் கேட்டு கைதிகள் மற்றும் அதிகாரிகள் அவரை பாராட்டினர். இது குறித்த வீடியோ வெளியாகி வைராலகி வருகிறது.