நாகை மாவட்டம், செருதூர் மீனவ கிராமத்தில் 1 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள உயர் நிலைப் பள்ளி கட்டுவதற்கான அடிக்கல் நாட்டல் நிகழ்ச்சி இன்று(ஜூலை 10) நடைபெற்றது. இதில் தமிழ்நாடு கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்துகொண்டு புதிய கட்டடத்திற்கான அடிக்கல்லை நாட்டினார்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஓ.எஸ். மணியன், சசிகலாவின் விடுதலை குறித்துப் பேசினார்.
அவர் கூறியதாவது, "சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால், அதிமுகவை யார் வழி நடத்துவது என்பதை கட்சியின் தலைமை தான் முடிவு செய்யும். நான் சாதாரண மாவட்டச் செயலாளர். மேலும் வெளி மாவட்டங்களில் இருந்து சொந்த ஊர் திரும்புபவர்கள் ஒளிந்துகொண்டு இருக்காமல், தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்" என்று கேட்டுக்கொண்டுள்ளார்.