ETV Bharat / state

வயலில் தேங்கிய மழை நீரை வெளியேற்றிய கூலி தொழிலாளி மரணம்.. அமைச்சர் மெய்யநாதன் நேரில் சென்று ஆறுதல்! - காலநிலை மாற்றுத்துறை அமைச்சர் மெய்யநாதன்

Sirkali farmer death: சீர்காழி அருகே வயலில் தேங்கிய மழை நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டபோது சேற்றில் சிக்கி உயிரிழந்த விவசாயி வீட்டிற்கு நேரில் சென்ற அமைச்சர் மெய்யநாதன் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 லட்ச ரூபாய் நிவாரண நிதியை வழங்கினார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 15, 2023, 11:06 PM IST

நாகப்பட்டினம்: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் டெல்டா மாவட்டங்களில் தொடந்து கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் மூன்றாவது நாளாக மழை தொடர்ந்து நீடித்து வருகிறது. கனமழை நீடிக்கும் மாவட்டங்களில் அமைச்சர்கள் நேரில் சென்று பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்தும், சேதங்கள் குறித்தும் பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி இருந்தார்.

அதன் அடிப்படையில் இன்று (நவ.15) மயிலாடுதுறை மாவட்டத்தில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றுத்துறை அமைச்சர் மெய்யநாதன் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். தரங்கம்பாடி தாலுகா தலைச்சங்காடு கிராமத்தில் நெடுஞ்சாலை பணிகள் நடைபெறுவதையொட்டி, மாற்றுச்சாலை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை அமைச்சர் ஆய்வு செய்தார்.

அதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள காளியம்மன் கோவில் தெருவில், மழை பாதிப்புகளைக் குறித்து ஒவ்வொரு வீடாகச் சென்று பார்வையிட்டு, பொதுமக்களை நேரில் சென்று சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளையும் குறைகளையும் அமைச்சர் மெய்யநாதன் கேட்டறிந்தார்.

மேலும், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த காத்திருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாய கூலித் தொழிலாளி கனகராஜ், வயலில் தேங்கிய மழை நீரை வெளியேற்ற வரப்புகளை வெட்டி அகற்றும் பணியை கனகராஜ் மேற்கொண்ட போது, சேற்றில் சிக்கி, மூச்சு திணறி அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து பாகசாலை காவல் நிலையத்துக்கு குடும்பத்தினர் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் கனகராஜின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கனகராஜ் இறப்பு குறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், விவசாய கூலித் தொழிலாளி உயிரிழந்த தகவலறிந்த சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சரும், மயிலாடுதுறை மாவட்ட பொறுப்பு அமைச்சர் மெய்யநாதன், உயிரிழந்த கனகராஜின் வீட்டிற்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 லட்சம் ரூபாய் நிவாரண நிதியை வழங்கினார்.

அப்போது மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அமுதவல்லி, மயிலாடுதுறை மாவட்டம் ஆட்சியர் மகாபாரதி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், சட்டமன்ற உறுப்பினர்கள் பூம்புகார் நிவேதா, எம்.முருகன், எம்.பன்னீர்செல்வம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் எனப் பலர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: விவசாயிகளை காக்க 'பயிர் காப்பீடு திட்டம்' அறிமுகம் செய்ய வேண்டும் - விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் யோசனை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.