நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த சீனிவாசபுரத்தைச் சேர்ந்தவர் மனோன்மணி சுந்தரேசன். பார்வைத் திறன் இழந்த இவர் உடல்நிலை சரியில்லாத தனது கணவருடன் வாழ்ந்துவருகிறார். அவர்களின் குடும்ப செலவிற்காக மயிலாடுதுறை பட்டமங்கலம் அண்ணாநகரில் உள்ள அவர்களின் பூர்வீக இடத்தை அருண் என்பவருக்கு கடை நடத்திக்கொள்ள வாடகைக்கு தந்துள்ளனர்.
இந்நிலையில் வாடகைக்கான ஒப்பந்த காலம் முடிவடைந்தும், இடத்தினை காலி செய்வதற்கு அருண் மறுத்து, அந்த இடத்தினை தன் பெயருக்கு மாற்றி பதிவு செய்து தர சொல்லி, மயிலாடுதுறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பால அருட்செல்வன், ரகு, வின்சன் ஆகிய மூன்று திமுக பிரமுகர்களை வைத்து, தங்களை கொலை செய்து விடுவதாக மிரட்டி வருவதாக மயிலாடுதுறை காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது.
ஆனால் புகார் அளித்தும் உரிய விசாரணை நடத்தாமல் அவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி, தங்கள் உயிருக்கு பாதுகாப்பு கேட்டும், தங்களது இடத்தை மீட்டுத்தர வேண்டி மனோன்மணி சுந்தரேசன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
இதையும் படிங்க: 'உண்ட வீட்டுக்கு ரெண்டகம்' - வேலை செய்யும் அலுவலகத்தில் கைவரிசை காட்டிய அலுவலர்!