ETV Bharat / state

மாயூரநாதர் கோயில் தீர்த்த குள வடிகால்களை சரிசெய்யும் கோயில் நிர்வாகம்! - புரெவி புயல்

மயிலாடுதுறை: புரெவி புயல் காரணமாக நிரம்பிய மாயூரநாதர் கோயில் தீர்த்த குளத்தில் தண்ணீரை வடியவைக்க, வடிகால் அடைப்புகளை சரிசெய்யும் முயற்சியில் கோயில் நிர்வாகம் தீவிரம் காட்டிவருகிறது.

mayuranathar-temple-tirtha-pond-drainage-repair-temple-management

author img

By

Published : Dec 15, 2020, 8:41 PM IST

மயிலாடுதுறை மாவட்டம் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான அபயாம்பிகை சமேத மாயூரநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலில் உள்ள தீர்த்த குளம் நிரம்பினால், அந்த தண்ணீர் அருகிலுள்ள செட்டிகுளம் வழியாக சென்று வாய்க்காலில் கலக்கும் வகையில் வடிகால் வசதி கட்டமைக்கப்பட்டுள்ளது.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக கோயில் குளத்திலிருந்து செட்டிகுளத்தில் தண்ணீர் செல்லும் நீர்வழிப்பாதை அடைப்பு மற்றும் ஆக்கிரமிப்புகளால் தூர்ந்துபோனது. இந்நிலையில் புரெவி புயல் கனமழை காரணமாக மாயூரநாதர் கோயில் தீர்த்தக் குளம் நிரம்பி தண்ணீர் கோயிலுக்குள் புகுந்து, 1 அடிக்குமேல் தேங்கியது. இதனால் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டதால் கோயில் நிர்வாகத்தினர் மின்மோட்டார் மூலம் குளத்திலிருந்து 5 நாட்களுக்கு மேலாக தண்ணீரை வெளியேற்றிவருகின்றனர்.

இந்நிலையில், மீண்டும் மழை பெய்தால் கோயிலுக்குள் மழைவெள்ள நீர் புகாமல் இருப்பதற்காக, குளத்தின் வடிகால் அடைப்புகளை கோயில் நிர்வாகத்தினர் ஜேசிபி மூலம் சரிசெய்து வருகின்றனர். மேலும், குளத்தில் உள்ள தண்ணீரை மற்றொரு வடிகால் வழியாக கோயிலின் எதிர்ப்புறம் உள்ள தேரடி குளத்துக்கு மின்மோட்டார் மூலம் வெளியேற்றி வருகின்றனர்.

மாயூரநாதர் கோயில் தீர்த்த குள வடிகால்களை சரிசெய்யும் கோயில் நிர்வாகம்

வடிகால் அடைப்புகள் சரிசெய்யப்பட்டாலும் ஒருசில ஆக்கிரமிப்புகளால் வடிகால் வழியாக குளத்திலிருந்து தண்ணீர் செல்வதற்கு சிக்கல் உள்ளதாகவும், அரசு அலுவலர்கள் குளத்தின் வடிகால் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோயில் நிர்வாகத்தினர், பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:“நரிக்குறவர் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட காவலர் விடுவிக்கப்படுவதா?” - தீர்ப்பை மாற்றிய நீதிபதிகள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.