ETV Bharat / state

'மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவியுங்கள்!' - வலுக்கும் போராட்டம்

நாகை: மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டுமென்று தமிழ்நாடு கட்டட தொழிலாளர் சங்க மாநில தலைவர் பொன்குமார் வலியுறுத்தியுள்ளார்.

சங்க மாநில தலைவர் பொன்குமார்
author img

By

Published : Jul 26, 2019, 2:28 PM IST

மயிலாடுதுறையை புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டுமென்று அடையாள ஆர்ப்பாட்டத்தை, தமிழ்நாடு கட்டட தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெற்றது. பின் பேசிய பொன்குமார், "தென்காசி, செங்கல்பட்டை புதிய மாவட்டங்களாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார்.

ஆனால் மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்கின்ற மக்களின் நீண்டநாள் கோரிக்கையை அரசு செவிசாய்க்காமல், கும்பகோணம் புதிய மாவட்டமாக விரைவில் உதயமாகும் என்று வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தது அதிர்ச்சி அளிக்கிறது. எனவே மக்களின் கோரிக்கையை அரசு மறுபரிசீலனை செய்து கூடிய விரைவில் மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

தமிழ்நாடு கட்டட தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் பொன்குமார் பேட்டி

Intro:மயிலாடுதுறையை புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்றும் , தமிழகத்தில் மணல்கொள்ளையை தடுத்து தட்டுப்பாடு இன்றி மணல்கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழக கட்டிட தொழிலாளர் சங்க மாநில தலைவர் பொன்குமார் பேட்டி:-
Body:நாகை மாவட்டம் மயிலாடுதுறைக்கு வந்த தமிழக கட்டிட தொழிலாளர் சங்க மாநில தலைவர் பொன்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில் சட்டசபையில் தமிழக முதல்வர் ஒரு நிலைபாடு எடுக்கிறார். வருவாய்த்துறை அமைச்சர் ஒரு நிலைபாடு எடுக்கிறார். தென்காசி, செங்கல்பட்டு புதிய மாவட்டம் என்று முதல்வர் அறிவிக்கிறார் ஆனால் மயிலாடுதுறை தனிமாவட்டமாக அறிவிக்க வேண்டுமென்ற மக்களின் நீண்டநாள் கோரிக்கையை செவிசாய்க்காமல் வருவாய்த்துறை அமைச்சர் கும்பகோணம் புதியமாவட்டமாக விரைவில் உதயமாகும் என்று அறிவிக்கிறார். கோமாளித்தனமான நிர்வாகம் தமிழக அரசாங்கத்தில் நடந்துகொண்டிருக்கிறது என்பதை காட்டுகிறது. மத்தியில் இருக்கும் மோடி அரசை தட்டிகேட்;க தமிழக அரசுக்கு தைரியம் இல்லை. கைகட்டி கொண்டு இருக்கக்கூடிய மோசமான நிலையில்தான் தமிழக அரசு இருக்கிறது. அதனால்தான் நமது மண்ணை அழிக்கும் மீத்தேன், ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களை மத்திய அரசு தமிழகத்தின் மீது திணிக்கிறது. தமிழகத்தில் திமுக எம்.பி.க்கள் கொடுத்த அழுத்தத்தால்தான் அஞ்சல்துறை தேர்வு ரத்து செய்யப்பட்டது. வேலூர் தொகுதியிலும் திமுக வேட்பாளர் நிச்சயம் வெற்றிபெறுவார். அவர் வெற்றிபெற்றால் தமிழகத்திற்காக லோக்சபாவில் கூடுதலாக ஒரு குறள்ஒலிக்கும். தமிழகத்தில் குடிநீர் பிரச்னை மிகப்பெரிய கொடூர நிலையை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது. குடிநீர் கிடைக்காமல் காலி குடங்களுடன் தமிழகம் முழுவதும் மக்கள் அலைந்துகொண்டிருக்கின்றனர். சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டுபோய் உள்ளது. அந்த ஏரிகளை 3 அடி ஆழத்திற்கு ஆழப்படுத்தினால் மழைகாலங்களில் வரக்கூடிய கூடுதல் நீரை சேமித்து வைத்தால் இரண்டு ஆண்டுகளுக்கு சென்னைக்கு குடிநீர் பஞ்சம் வராது. இதுதொடர்பாக தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்த நிலையில் இதுவரை அரசு ஏரிகளை தூர்வாருவதற்கான நடவடிக்கை எடுக்க வில்லை. தமிழகத்தில் மணல் கொள்ளை அடித்து வெளிமாநிலங்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது, இதனால் சாமானிய மக்களுக்கு மண்கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. விவசாயத்திற்கு அடுத்தப்படியாக கட்டிடத்தொழில்மூலம் தான் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. அதனால் தட்டுப்பாடு இன்றி மக்களுக்கு மணல்கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மண்ணை பாலைவனமாக்கும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்கக்கூடாது. காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்றார்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.