மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் ஆனந்தஜோதி. ஓதவந்தான்குடி அரசு பள்ளி தலைமையாசியரான அவரின் மனைவி சித்ரா(40) இன்று(செப்.18) அதிகாலை வீட்டு வாசலில் கோலம் போடுவதற்காக வந்துள்ளார். அப்போது அங்கு வந்த கும்பல் ஆயுதங்களால் அவரின் தலையில் பலமாகத் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளது.
அதில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த சீர்காழி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். இந்த நிலையில் சம்பவத்தின் போது அருகிலிருந்த சிசிடிவியில் சித்ரா தாக்கப்படும் காட்சி பதிவாகியுள்ளது. தற்போது அந்த சிசிடிவி காட்சிகள் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மயிலாடுதுறையில் பெண் அடித்துக் கொலை: மாவட்ட எஸ்.பி நேரில் விசாரணை