மயிலாடுதுறையில் சாலை தரமற்ற முறையில் அமைவதாகவும், இதனால் சாலையின் மட்டம் உயர்ந்து மழைக்காலங்களில் குடியிருப்புப் பகுதிகளில் தண்ணீர் புகுவதாக கூறி மயிலாடுதுறை வர்த்தர் சங்கத் தலைவர் செந்தில்வேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடந்திருந்தார்.
இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், புதிய சாலைகள் அமைக்கும்போது பழைய சாலைகளைப் பெயர்த்து எடுத்த பின்னரே புதிய சாலை அமைக்க வேண்டும் என்று அண்மையில் தீர்ப்பளித்திருந்தது.
அதன்படி, மயிலாடுதுறையில் இம்மாதம் நடைபெற்ற சாலை அமைப்பு பணிகளின்போது முறைப்படி பழைய சாலைகளை பெயர்த்து எடுத்த பின்னரே புதிய சாலை அமைக்கப்பட்டது.
இந்நிலையில், மயிலாடுதுறை சாரத்தட்டை தெரு என்ற பகுதியில் நேற்று நடைபெற்ற சாலை அமைப்பு பணியின்போது நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக பழைய சாலை மீதே புதிய சாலை அமைக்கப்பட்டதாக அப்பகுதி மக்களுக்குத் தெரியவந்தது.
இதையடுத்து சம்பவ இடம் விரைந்து சென்ற அவர்கள் சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, அப்பகுதியில் இதுவரை போடப்பட்ட சாலையைப் பெயர்த்து எடுத்துவிட்டு நீதிமன்ற உத்தரவின்படி புதிய சாலை அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க : மயிலாடுதுறையில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை பணி