நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மணல்மேடு பேரூராட்சியில் திடக்கழிவுக் குப்பைகளை அகற்ற மூன்று லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு குப்பை அகற்றும் வாகனங்களை மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் ராதாகிருஷ்ணன் துப்புரவு பணியாளர்களுக்கு வழங்கினார். பின்னர், மணல்மேடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேங்கிக் கிடக்கும் மக்கும், மக்காத குப்பைகளை இந்த வாகனங்கள் மூலம் அகற்றுவதற்குப் பயன்படுத்துமாறு அவர்களிடம் கூறினார்.
இதையடுத்து, மணல்மேட்டிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு செய்தார். பின்னர் அங்கு போதிய மருந்துகள் கையிருப்பில் உள்ளதா என்று மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். மேலும் மணல்மேட்டில் புதிதாக கட்டப்பட்டுவரும் பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகளையும், மணல்மேட்டில் புதிதாக அமையவுள்ள தீயணைப்பு நிலையத்திற்கான இடத்தையும் அவர் ஆய்வு செய்தார்.
இதையும் படிங்க: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எம்எல்ஏ ராஜாகிருஷ்ணன் நிவாரணம்!