மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா மேமாத்தூர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் 2017-18ஆம் ஆண்டு பயிர்காப்பீடு செய்த விவசாயிகளுக்கு 50 விழுக்காடு மட்டும் இழப்பீட்டுத் தொகை வழங்கிவிட்டு மீதி 50 விழுக்காடு ஒரு மாதத்தில் வழங்கப்படும் எனக் கூறியுள்ளனர்.
இதையடுத்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் 372 விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகை ரூ. 98 லட்சத்தை உடனே வழங்கவேண்டும் எனவும் இல்லை என்றால் இழப்பீட்டுத் தொகை வழங்காத கூட்டுறவுத்துறை அலுவலர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்ய வேண்டுமென கோரி காவேரி டெல்டா பாசனதாரர் முன்னேற்றத்தை சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தலைவர் கோபிகணேசன் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் மயிலாடுதுறை கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க... உயிரிழந்தவரின் உடலை அடக்கம் செய்ய மாற்று மதத்தினர் எதிர்ப்பு!