ETV Bharat / state

நேப்பியர் பிரிட்ஜ் போன்று மாறும் மயிலாடுதுறை பாலம்! - Napier Bridge is painted in black and white like chess board grids

மயிலாடுதுறையில் செஸ் ஆர்வலர்களின் முயற்சியால் அரசு மருத்துவமனை சாலையில் உள்ள காவிரி ஆற்றுப்பாலம் "நேப்பியர் பிரிட்ஜ்" போன்று கறுப்பு, வெள்ளை வண்ணம் தீட்டப்பட்டு வருகின்றது.

நேப்பியர் பிரிட்ஜ் போன்று மாறும் மயிலாடுதுறை பாலம்

author img

By

Published : Jul 25, 2022, 6:56 PM IST

மயிலாடுதுறை: சர்வதேச 44ஆவது ஒலிம்பியாட் செஸ் விளையாட்டுப் போட்டிகள் மாமல்லபுரத்தில் வருகின்ற 28ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி தமிழ்நாட்டில் செஸ் போட்டி குறித்து பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சென்னையின் பிரதானப்பகுதியில் அமைந்துள்ள நேப்பியர் பாலம் செஸ் போர்டு கட்டங்களைப் போன்று கறுப்பு, வெள்ளை நிறத்தில் வர்ணம் தீட்டப்பட்டு பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது. அதேபோல் மயிலாடுதுறையில் செஸ் ஆர்வலர்களின் முயற்சியால் அரசு மருத்துவமனை சாலையில் உள்ள காவிரி ஆற்றுப்பாலம் "நேப்பியர் பிரிட்ஜ்" போன்று கறுப்பு, வெள்ளை வண்ணம் தீட்டப்பட்டு வருகிறது.

மயிலாடுதுறை முன்னாள் எம்.எல்.ஏ ஜெக வீரபாண்டியன் தலைமையில், சமூக ஆர்வலர் அப்பர் சுந்தரம், ஓவியர் ரஜினி பாஸ்கர், மாவட்ட செஸ் கழகச் செயலாளர் வெற்றிவேந்தன் ஆகியோர் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மயிலாடுதுறை நகரின் பிரதானப்பகுதியான அரசு மருத்துவமனை சாலையில் உள்ள இந்தப்பாலம் எழில் பெற்று வருவதை பொதுமக்கள் பலரும் ஆர்வமுடன் பார்த்துச்செல்கின்றனர். இந்த வண்ணம் தீட்டும் பணிகள் நாளை முடிவடைகிறது.

நேப்பியர் பிரிட்ஜ் போன்று மாறும் மயிலாடுதுறை பாலம்

இதையும் படிங்க:'6 மாதங்களில் எனது குடும்ப உறுப்பினர்கள் 3 பேர் அடுத்தடுத்து இறந்தார்கள்': மன உறுதி குறித்துப்பேசிய முர்மு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.