மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சட்டநாபுரத்தைச் சேர்ந்தவர் வளர்மதி (58), இவர் ஆடு, மாடுகளை அதிகளவில் வைத்து வளர்த்துவருகிறார்.
இந்நிலையில் நேற்று விடியற்காலை வீட்டின் கொள்ளைபுறத்தில் கட்டிவைத்த ஆடு, மாடுகளைப் பார்க்க வளர்மதி சென்றபோது அங்கு மறைந்திருந்த அடையாளம் தெரியாத நபர்கள் வளர்மதியை சரமாரியாகத் தாக்கி, அவரிடமிருந்த மூன்று கிராம் தங்க நகையை (மூக்குத்தி) பறித்துச் சென்றனர்.
அந்த நபர்கள் தாக்கியதில் வளர்மதி பலத்த காயத்துடன் தீவிர சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இது குறித்து சீர்காழி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து நகையைப் பறிக்க வந்தார்களா? அல்லது கால்நடைகளைத் திருட வந்தார்களா? என்ற கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: மும்பைக்குச் சென்ற ரூ.7 கோடி மதிப்பிலான சியோமி செல்போன்கள்... நடுவழியில் லாரி கடத்தப்பட்டதால் பரபரப்பு