கூட்டுறவு வங்கிகளில் உழவர்கள் பெற்ற வேளாண் கடன்களைத் தள்ளுபடி செய்து தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் அறிவிப்பு வெளியிட்டார்.
இதையடுத்து, மயிலாடுதுறை நீடூர் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கத்தில் கணக்கு வைத்துள்ள 261 உழவர்களுக்கு அசல் மற்றும் வட்டித்தொகையான 1.92 கோடி ரூபாய் பயிர்க்கடன் தள்ளுபடிசெய்யப்பட்டது.
இதையடுத்து, 261 உழவர்களுக்கு வேளாண் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான ஆணையை கூட்டுறவுச் சங்கங்களின் துணைப் பதிவாளர் சாய் நந்தினி முன்னிலையில் நீடூர் கூட்டுறவுச் சங்கத் தலைவர் சந்தோஷ்குமார் வழங்கினார். இதனால் மயிலாடுதுறை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதையும் படிங்க:பயிர்க்கடன் தள்ளுபடி - திருவண்ணாமலையில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!