ETV Bharat / state

சாத்தான்குளம் விவகாரம்: காவல் துறையைக் கண்டித்து மா.கம்யூ. ஆர்ப்பாட்டம் - Sathankulam father-son case

நாகப்பட்டினம்: சாத்தன்குளம் தந்தை-மகன் சந்தேக மரணம் தொடர்பாக காவல் துறையினரைக் கண்டித்து மயிலாடுதுறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

marxist-communist-party-protests
marxist-communist-party-protests
author img

By

Published : Jun 27, 2020, 6:54 AM IST

தூத்துக்குடி மாவட்டம் சாத்தன்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகள் ஃபென்னிக்ஸ், அவரது தந்தை ஜெயராஜ் இருவரும் கோயில்பட்டி கிளைச் சிறைச்சாலையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டனர்.

அவர்களைக் காவல் துறையினர் அடித்து துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. அதையடுத்து அவர்கள் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இச்சம்பவத்தையடுத்து காவல் துறையினரைக் கண்டித்து பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டங்களையும் நடத்திவருகின்றனர்.

அதன்படி, தந்தை-மகன் சந்தேக மரணம் தொடர்பாக நாகப்பட்டினம் மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதற்கு மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சீனிவாசன் தலைமை தாங்கினார்.

இதையும் படிங்க: சாத்தான்குளம் சம்பவம்: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1கோடி வழங்கக்கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.