ETV Bharat / state

நூதன முறையில் மணல் கடத்தல் - ஒருவர் கைது, டிராக்டர் பறிமுதல்! - naagai latest news

நாகை: கீழ்வேளூர் அருகே ஆற்றுமணல் மேல் எம்.சேண்ட் மணலை கொட்டி நூதனமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட நபரை கீழ்வேளூர் காவல் துறையினர் கைது செய்து, டிராக்டரை பறிமுதல் செய்துள்ளனர்.

naagai
naagai
author img

By

Published : Dec 15, 2019, 10:06 AM IST

நாகை மாவட்டம், ஆழியூர் பிரிவு சாலையில் நேற்று கீழ்வேளூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே எம்.சேண்ட் மணல் ஏற்றி வந்த டிராக்டரை நிறுத்தி, ஓட்டுநரிடம் மணல் வாங்கியதற்கான ஆவணங்களைக் காவலர்கள் கேட்டுள்ளனர்.

நூதனமுறையில் மணல் கடத்தல்

ஓட்டுனர் ஆவணங்களின்றி முன்னுக்குப்பின் முரணாகப் பதிலளித்துள்ளார். சந்தேகம் அடைந்த காவலர்கள் டிராக்டரை சோதனை செய்தபோது எம்.சேண்ட் மணலை மேலே கொட்டி, ஆற்று மணலை திருட்டுத்தனமாக ஏற்றி வந்திருப்பது தெரிய வந்தது. பின்னர், காவல் துறையினர் மணல் கடத்தலில் ஈடுபட்ட ஓட்டுநர் ராஜ் என்பவரைக் கைது செய்து, டிராக்டரை பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க: கரூரில் மணல் கடத்தல் புகார்: பொதுப்பணித் துறை, ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு!

Intro:நாகை அருகே எம்.சண்டு மணலை மேலே தூவி நூதனை முறையில் ஆற்றுமணல் கடத்தலில் ஈடுபட்ட ஒருவர் கைது, டிராக்டர் பறிமுதல் , கீழ்வேளூர் போலீசார் நடவடிக்கை.Body:நாகை அருகே எம்.சண்டு மணலை மேலே தூவி நூதனை முறையில் ஆற்றுமணல் கடத்தலில் ஈடுபட்ட ஒருவர் கைது, டிராக்டர் பறிமுதல் , கீழ்வேளூர் போலீசார் நடவடிக்கை.

நாகை மாவட்டம், ஆழியூர் பிரிவு சாலையில் கீழ்வேளூர் காவல் நிலைய ஆய்வாளர் முருகேசன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது அவ்வழியே எம்.சண்டு மணல் எற்றிவந்த டிராக்டரை மறித்து ஓட்டுநரிடம் எம்.சண்டு மணலுக்கு உரிய ஆவணங்களை காட்டும்படி போலீசார் கேட்டுள்ளனர். ஆனால், ஓட்டுனர் உரிய ஆவணங்கள் இல்லை என முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் டிராக்டரை சோதனை செய்து பார்த்தபோது எம்.சண்டு மணலை மேலே தூவி ஆற்று மணலை திருட்டுத்தனமாக ஏற்றி சென்றது தெரியவந்தது. பின்னர் மணல் கடத்தலில் ஈடுபட்ட வாகனத்தின் ஓட்டுனர் பரங்கிநல்லூர் கிராமத்தை சேர்ந்த ராஜ் என்பவரை கீழ்வேளூர் போலீசார் கைது செய்ததோடு, மணல் ஏற்றிவந்த வாகனம் மற்றும் மணலை பறிமுதல் செய்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.