கரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவையின்றி வெளியே வரும் மக்கள் மீது காவல் துறையினர் அபராதம் விதித்தும், கண்டித்தும் வந்தனர்.
அந்த வகையில், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மக்களை கட்டுப்படுத்த போதிய காவலர்கள் இல்லாத காரணத்தினால், காவல் துறை சார்பில் "பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்" என்ற வகையில் சில தன்னார்வலர்களை பணியில் சேர்த்தனர்.
இந்நிலையில், காவல் துறையுடன் இணைந்து பணியாற்றிய சீர்காழியை சேர்ந்த கமல கண்ணன்(23), காவல் நிலையத்திலிருந்து தனிநபராக வெளியே வருவதை செல்போனில் வீடியோ எடுத்து கேங்ஸ்டார் பாடலுடன் டிக்டாக்கில் வெளியிட்டுள்ளார்.இந்தக் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த சீர்காழி காவல் துறையினர், காவல் துறை நட்பை தவறாக பயன்படுத்தி களங்கம் ஏற்படுத்திய காரணத்திற்காக கமலக்கண்ணனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: செல்போன் டவர் மீது ஏறி 'குடி'மகன் ரகளை! - காவல் துறை விசாரணை