ETV Bharat / state

மகா சிவராத்திரி: மயூர நாட்டியாஞ்சலி விழா தொடக்கம்! - Mayura Natyanjali

மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் மயூர நாட்டியாஞ்சலி விழா நடந்தது. இதில், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த நடன கலைஞர்கள் பங்கேற்றனர்.

மயூர நாட்டியாஞ்சலி விழா
மயூர நாட்டியாஞ்சலி விழா
author img

By

Published : Mar 9, 2021, 2:14 PM IST

மகா சிவராத்திரியை முன்னிட்டு மயிலாடுதுறையில் உள்ள தொன்மை வாய்ந்த மாயூரநாதர் கோயிலில் மயிலாடுதுறை சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் 15ஆம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலி விழா கோலாகலமாக தொடங்கியது.

இவ்விழாவை திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீமத் அம்பலவாண தம்பிரான் சுவாமிகள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா ஆகியோர் மங்கள ஒளிவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

மயூர நாட்டியாஞ்சலி விழா

முதல்நாள் நாட்டியாஞ்சலி விழாவில் சென்னை நரேந்ரா நாட்டிய குழுவினர், கலைமாமணி பார்வதி ரவி கண்டசாலா குழுவினர், கோயம்புத்தூர் சங்கரம் ஸ்கூல் ஆஃப் டான்ஸ் குழுவினர் மற்றும் ஸ்ரீவிஷ்ணு நாட்டியாலயா உள்ளிட்ட குழுவினரின் நாட்டிய நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்தவிழாவில், நாட்டிய மற்றும் இசைக் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இதில் திரளான பார்வையாளர்கள் பங்கேற்று நடன நிகழ்ச்சியை கண்டு களித்தனர்.

இதையும் படிங்க: நாங்கள் சொன்னால் அவர்கள் காப்பியடிப்பார்கள்- ஸ்டாலினை மறைமுகமாக தாக்கிய கமல்ஹாசன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.